சேனைத் தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
உறவே தளம் நாடி வந்த நீங்கள் உங்களை பதிவுசெய்து கருத்துகளை, பகிர்ந்து கொள்ளுங்கள்.

வருகை தந்தமைக்கு நன்றி .
Latest topics
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.
by பானுகமால் Today at 6:52

» சேனையின் நுழைவாயில்
by Muthumohamed Today at 1:14

» தினம் ஒரு குர்ஆன் வசனம்!
by Muthumohamed Today at 1:12

» தினம் ஒரு ஹதீஸ்
by Muthumohamed Today at 0:53

» உயர் தரம்வாய்ந்த வீடியோக்களை இயக்குவதற்கு
by Muthumohamed Today at 0:49

» எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த்துக்கு.
by Muthumohamed Today at 0:47

» கலைஞர் பேச கூடாது
by Muthumohamed Today at 0:46

» இந்தியா-சீனா உறவை வலுப்படுத்தப்போகும் 8 ஒப்பந்தங்கள்!
by Muthumohamed Today at 0:43

» பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட கதை
by Muthumohamed Today at 0:41

» என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்
by *சம்ஸ் Today at 0:39

» முத்து! எவ்வாறு செய்யப்படுகிறது!
by Muthumohamed Today at 0:31

» அழகு..
by பானுகமால் Today at 0:21

» நடிப்பு
by ஜனநாயகன் Today at 0:19

» இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஜனநாயகன் அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்.
by *சம்ஸ் Today at 0:14

» ஸ்ரீசாந்தின் சூதாட்ட வாழ்க்கை சினிமாவாகிறது
by பானுகமால் Today at 0:11

» sms காதல் கவிதைகள்
by பானுகமால் Today at 0:09

» தலைவர் எதுக்கு திடீரென டென்னிஸ் கத்துக்கிறார்...!
by Muthumohamed Today at 0:04

» கரு வளையங்கள் நீங்க
by *சம்ஸ் Yesterday at 23:39

» தவிப்பு
by *சம்ஸ் Yesterday at 23:22

» நீ என்ன விலாங்கு மீனா ...?
by பானுகமால் Yesterday at 23:18

» கவிதையில் காதல்கதை (வயது முக்கியம்)
by *சம்ஸ் Yesterday at 23:03

» தவறுகளை ஒத்துக்கொள்ளப் பழகுவோம்..
by பானுகமால் Yesterday at 22:59

» love rose flower
by rammalar Yesterday at 22:19

» முள்ளும் மலரும்
by rammalar Yesterday at 21:39

» கண்ணீரிலும் மென்னீர் உண்டு ..
by rammalar Yesterday at 21:38

» காதல் ஒன்றுதானே ..
by rammalar Yesterday at 21:33

» உற்சாகம்-
by rammalar Yesterday at 21:27

» ஆசை
by rammalar Yesterday at 21:22

» காரணம் தெரியாமல் காப்பி குடிக்கலாமா? இதோ இன்றே தெரிந்துகொள்ளுங்கள்...
by Muthumohamed Yesterday at 21:15

» மனைவியின் நடத்தையில் சந்தேகம்: 3 குழந்தைகளை கொன்றுவிட்டு பஸ் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை
by Muthumohamed Yesterday at 21:14

» பில்கேட் அவர்களுக்கு ஒரு கடிதம் - நகைசுவை
by Muthumohamed Yesterday at 21:13

» இத்தனை வித்தைகள் தேங்காயில் உண்டா? தேங்காயின் சத்துப் பட்டியல்!
by Muthumohamed Yesterday at 20:51

» உலகத்தை திருத்த நான்...
by மீனு Yesterday at 20:45

» பெண்கள் எந்த விசயத்தில் சிறப்பாக செயல்படுவார்கள்?ஆண்கள் எந்த விசயத்தில் சொதப்புவார்கள் ? ஒரு ஆய்வு
by Muthumohamed Yesterday at 20:45

» காதலோடு பேசுகிறேன்
by மீனு Yesterday at 20:42

.
சேனைத் தமிழ் உலா on facebook
.

மன்மத வசியம் வைக்கும் குடும்பப் பெண்கள்!!

View previous topic View next topic Go down

Sticky மன்மத வசியம் வைக்கும் குடும்பப் பெண்கள்!!

Post by நண்பன் on Thu 26 May - 1:15

பெண்களை அடைவதற்கு வசியம் செய்யும் ஆண்பிள்ளைகள் பற்றித்தான் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், தனக்குப் பிடித்த ஆண்களை வசியம் செய்யும் வேலையில், சில பெண்களும் இப்போது இறங்கியிருக்கிறார்கள். அதுவும் கல்யாணம் ஆன பெண்கள். அதற்காக அவர்கள் ஜோதிடர்கள் மற்றும் மாந்திரீக ஆசாமிகளை அணுகுகிறார்கள். அதில் பல பெண்கள் ஏமாந்து போய், இருக்கின்ற வாழ்க்கையையும் தொலைத்துவிட்டுக் கதறுகிறார்கள்!’’ என நண்பர் ஒருவர் சொல்லிக்கொண்டே போக, நாம் ஆடிப்போய்விட்டோம்.

தகவல் சொன்ன நண்பரே நமக்குச் சில ஜோதிடர்களை(?)யும் அறிமுகப்படுத்தி வைத்தார். ‘‘எங்கள் பெயர்.. படம் ஏதும் வெளியே வரக்கூடாது’’ என்ற நிபந்தனையின் பேரில் நம்மிடம் அவர்கள் பேசத் தொடங்கினார்கள்.

‘‘ஆண்களைப் போலத் தான் பெண்களுக்கும் ஆசைகள், தேவைகள், அன்பிற்கான ஏக்கம், தன் மீது பிறர் பரிவு காட்டமாட்டார்களா என்ற எதிர்பார்ப்பு.. ஆகிய எல்லாம் இருக்கின்றன. ஆனால், கலாசாரம் என்ற பெயரில் அவர்களைப் பேசவிடாமல் கட்டி வைத்துள்ளோம். சிலர் அதை மீறும்போது, அதைப் பூதாகாரமான பிரச்னையாக்குகிறோம். ஆனால், இதே தவறை ஆண்கள் செய்யும்போது, நாம் அதைக் கண்டுகொள்வதே இல்லை.

திருமணமான சில பெண்கள் ‘என் கணவருக்கு வசியம் செய்ய வேண்டும்’ என எங்களிடம் வருகிறார்கள். ‘என்ன மாதிரியான வசியம் செய்யவேண்டும்?’ எனக் கேட்டால் ‘நான் எப்படி நடந்தாலும் அதை அவர் கண்டுகொள்ளக்கூடாது. அது மாதிரியான வசியம் பண்ணித் தாருங்கள்’ எனக் கேட்கிறார்கள். இதற்குப் பெரும்பாலான பெண்கள் சொல்லும் காரணங்கள்.. ‘என் கணவர் குடிச்சிட்டு வந்து அடிக்கிறாரு. அவருக்கு வேறொரு பெண்ணோட தொடர்பிருக்கு. மற்ற ஆண்களிடம் நான் பேசும்போது, என் மீது சந்தேகப்படறாரு...’ என்பதுதான்.

இது, கணவன் தன்னை டார்ச்சர் செய்யக்கூடாது என்பதற்காக மனைவி வைக்கச்சொல்லும் வசியம். இதுகூட ஒரு வகையில் நியாயமானதுதான். ஆனால், எங்களிடம் வருபவர்களில் ஐம்பது சதவிகிதம் பேர் மட்டுமே இப்படி வருகிறார்கள். மீதி ஐம்பது சதவிகிதம் பேர் வேறு ஆண்களுக்கு வசியம் வைக்கச் சொல்லித்தான் வருகிறார்கள்.


[You must be registered and logged in to see this image.]
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.[You must be registered and logged in to see this image.]

நண்பன்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:-: 74976
சேர்ந்தது:-: 29/10/2010

Back to top Go down

Sticky Re: மன்மத வசியம் வைக்கும் குடும்பப் பெண்கள்!!

Post by நண்பன் on Thu 26 May - 1:15

அதாவது பணம், உடல் சுகம், கனிவான வார்த்தை... இவற்றில் ஏதேனும் ஒன்று கணவர் மூலம் கிடைக்காமல் போன பெண்களில் சிலர், திசைமாறத் தயாராகிறார்கள். தன்னுடன் ஆறுதலான வார்த்தைகள் பேசும் நபரை இவர்களுக்குப் பிடிக்கிறது. இருவருக்குமிடையிலான நட்பு வளர்கிறது. இது தனது கணவருக்குத் தெரியக்கூடாது என நினைக்கிறார்கள். அதோடு மட்டுமில்லாமல் ‘நான் விரும்பும் நபர் எனக்குக் கிடைக்கவேண்டும்’ என எங்களிடம் வந்து கோரிக்கை வைக்கிறார்கள்... ‘அவர் (விரும்பும் நபர்) என்னோடு நல்லா பேசறாரு. அது மட்டும் போதாது. அவர் என்னிடம் அன்பா இருக்குமாறும் வசியம் செய்ய வேண்டும்..’ எனக் கேட்கிறார்கள். இது மாதிரியான போக்குத்தான் விபரீதமானது.

இப்படி வருபவர்களில், கணவருடைய நண்பர்களின் வலையில் விழுந்த பெண்கள்தான் அதிகம். மனைவி, தனது கணவரைப் பற்றி அவரது நண்பரிடம் புகார் சொல்வாள். அதுவே கடைசியில் வேறு விதமான நட்பை உருவாக்கிவிடுகிறது.

இதுபோன்ற கோரிக்கைகளோடு வரும் மனைவிகளுக்கு நாங்கள் அட்வைஸ் செய்வோம்.. உண்மை என்ன என்பதை அறிந்து தேவையானதைச் செய்து கொடுப்போம்..’’ என முடித்துக்கொண்டார்கள் நாம் சந்தித்த சில ஜோதிடர்கள்.

ஆனால், ‘‘இந்த ஜோதிடர்கள், மாந்திரீகர்கள் அனைவரும் பணம் கறக்கவே இப்படியெல்லாம் செய்கிறார்கள்’’ என்கிறார்கள் சிலர். இது குறித்து அறிய அந்த மாந்திரீகர்களுடனேயே இருக்கும் உதவியாளர்கள் (எடுபிடி) சிலரை ரகசியமாகத் தள்ளிக்கொண்டு சென்று, விஷயத்தைக் கறந்தோம்...


[You must be registered and logged in to see this image.]
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.[You must be registered and logged in to see this image.]

நண்பன்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:-: 74976
சேர்ந்தது:-: 29/10/2010

Back to top Go down

Sticky Re: மன்மத வசியம் வைக்கும் குடும்பப் பெண்கள்!!

Post by நண்பன் on Thu 26 May - 1:16

வசியம் என்கிற ஐடியாவை பெண்களுக்குக் கொடுப்பதே சில ஜோதிடர்களும் மாந்திரீகவாதிகளும் தான். ‘கணவன் என்கிட்ட சரியா இல்லை. அதை எப்படிச் சரி செய்வது?’ என ஜோதிடம் கேட்க வரும் பெண் கேட்பாள். இந்த ஒரு வார்த்தை போதும்.. உடனே ஜோதிடர் கதை அளக்க ஆரம்பிப்பார். ‘உன் கணவர் ஒரு பெண்ணோட மயக்கத்தில் இருக்கிறாரு. அவரை உன் பக்கம் கொண்டு வரணும்னா ஒரு பரிகார பூஜை செய்யணும்’ என்பார். எப்படியாவது தனது கணவன் தன்னிடம் சரியாக நடந்தால் போதும் என்ற துடிப்பிலுள்ள அந்தப் பெண்ணும் பூஜைக்கு ஒப்புக் கொள்வாள்.

பிறகு ஜோதிடர் அடுத்த கட்டத்துக்குப் போவார். ‘பூஜைக்குக் கட்டுப்பட்டு வரலை. அதனால் உன் கணவருக்கு வசியம்தான் வைக்கணும். அதைச் செய்துட்டோம்னா எப்பவும் உன் கணவர் உன் பின்னாடியே நாய்க்குட்டி போல சுத்திச் சுத்தி வருவாரு...’ எனத் தூபம் போடுவார்.

‘அதுக்கு என்ன செய்யணும்?’ என அந்தப் பெண் தயங்கித் தயங்கிக் கேட்பாள். ‘வேறொண்ணுமில்லை. மூவாயிரம் ரூபாய் செலவாகும்..’ என்பார்.

மூவாயிரமா?’என வாய்பிளக்கும் பெண்களிடம், ‘இதெல்லாம் குறைஞ்ச ரேட். எப்ப உங்களால் அந்தப் பணத்தைத் தர முடியுமோ, அப்போ வாங்க. முடிச்சுத் தர்றோம். ஆனால், அதற்குள் உங்களுக்கும் உங்கள் கணவருக்குமிடையிலான இடைவெளி அதிகமாயிடும்.. பார்த்துக்குங்க!’ என்று பயமுறுத்தி அனுப்பிவிடுவார்!

பாவம்! அந்தப் பெண் பயந்துகொண்டு, எப்படியாவது பணத்தைப் புரட்டிக்கொண்டு அடுத்த நாளே வந்து விடுவாள். இது ஒரு ரகம்.

இன்னொரு ரகம் ரொம்பவே வித்தியாசமானது. அதாவது, தான் விரும்பும் ஆண், தனக்குக் கிடைக்கவேண்டும் என்பதற்காக வசியம் வைக்க வரும் பெண்கள். இவர்கள் தங்களுக்கு நெருக்கமான தோழிகளுடன் வருவார்கள். முதலில் பேசவே தயங்கும் இவர்களை நாங்கதான் உற்சாகமூட்டி ‘எதுவானாலும் பரவாயில்லை, சொல்லுங்க.. அப்பத்தானே நிவர்த்தி செய்யமுடியும்’னு தைரியமூட்டுவோம். பிறகு பேசத் தொடங்குவார்கள்.


[You must be registered and logged in to see this image.]
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.[You must be registered and logged in to see this image.]

நண்பன்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:-: 74976
சேர்ந்தது:-: 29/10/2010

Back to top Go down

Sticky Re: மன்மத வசியம் வைக்கும் குடும்பப் பெண்கள்!!

Post by நண்பன் on Thu 26 May - 1:20

இவர்களும், ‘என் கணவர் சரியில்லை.. வேறு ஒரு பொண்ணை வைச்சிருக்காரு.. ஆனால், என் மீது ஒருத்தர் பரிவா இருக்கிறாரு. அவரு எனக்கு வேண்டும். எப்பவுமே அவர் என்னையே நினைச்சிட்டு இருக்கணும். ஆனால், எங்க தொடர்பு எதையும் என் கணவர் கண்டுக்கக் கூடாது. அதுக்கு ஏதாவது செய்து தரணும்’னு கேட்பாங்க. இதைக் கேட்டதும் ஜோதிடர் நிமிர்ந்து உட்காருவார்.

‘எது செய்தாலும் உன் கணவர் கண்டுக்காத நிலையை ஏற்படுத்தணும். அடுத்து, நீ நினைக்கிறவர் உன் வசமே இருக்கணும். ப்பூ.. இவ்வளவுதானே விஷயம்!. இதற்கு தனித்தனியே இரண்டு பூஜைகள் செய்ய வேண்டும். இந்த பூஜைகளுக்கு ஐந்தாயிரம் ரூபாய் செலவாகும்’ என்பார் ஜோதிடர். வந்தவர்களும் பேரம் பேசாமல் ஒப்புக் கொள்வார்கள். இந்த ரேட் ஆளைப் பொறுத்து பத்தாயிரம் வரை எகிறும்.

ரேட் முடிவானதும். ‘வர்ற அமாவாசைக்கு உன் கணவரோட தலைமுடி.. இல்லேன்னா அவர் சட்டையில் இருந்து ஒரு சின்ன துண்டுத் துணியைக் கொண்டு வா’ என்பார். அதோடு ஓர் எலுமிச்சம் பழத்தை எடுத்து மந்திரத்தை முணுமுணுத்தவாறே அதைத் தனது கண்களில் ஒற்றி அந்தப் பெண்ணிடம் கொடுப்பார். ‘ராத்திரி உன் கணவர் தூங்கும்போது, அவரது தலையணைக்கு அடியில் இந்த எலுமிச்சம்பழத்தை வைச்சிடு. காலையில் அவர் எழுவதற்கு முன்னாடி நீ எழுந்து, அந்த எலுமிச்சம் பழத்தை எடுத்து அவரை மூன்று முறை சுற்று. பிறகு அதைத் துணியில் சுற்றி அமாவாசைக்கு நீ வர்றப்ப கொண்டு வா’ என உத்தரவிடும் தொனியில் சொல்வார்.

அதன்படியே அமாவாசைக்கு அந்தப் பெண்ணும் கரெக்டாக வந்துவிடுவாள். அந்தப் பெண்ணை உட்கார வைத்து, ‘கணவனைச் சுற்றிய எலுமிச்சம் பழத்தைத் தா’ எனக் கேட்பார் ஜோதிடர். மந்திரம் சொல்லி அதை ஒரு சிறிய டப்பாவினுள் ஆத்திரத்துடன் வீசுவார். பின் சட்டென அந்த டப்பாவின் வாயை இறுக்கமாக மூடுவார். ‘உன் கணவரைக் கட்டிப்போட்டுட்டேன்!’ என்று சொல்லிக் கொண்டே அந்தப் பெண்ணை நிமிர்ந்து பார்த்துச் சிரிப்பார். அந்தப் பெண் கொண்டு வந்திருக்கும் கணவரின் முடி அல்லது சட்டைத் துணியை வாங்கிக் கொண்டு பூஜையைத் தொடங்குவார்.

ஒரு பலகையில் அரிசி மாவால் செய்து வைத்த ஓரடி நீள மனித உருவ பொம்மை, அவர் முன்பு ரெடியாக இருக்கும். அதன் தலையில் அந்தப் பெண் கொண்டு வந்த கணவனின் முடியைச் செருகுவார். எதையோ முணுமுணுத்தபடி அந்த மாவுப் பொம்மைக்கு மிளகைக் கொண்டு கண் வைப்பார். தொடர்ந்து நெல் வைத்து மூக்கு வைப்பார். இப்படி மந்திரம் சொன்னபடியே ஒவ்வொரு உறுப்பாக முன்னேறுவார். பொம்மையின் வயிற்றுப்பக்கம் வரும்போது, இருபத்தைந்து பைசா நாணயம் ஒன்றை எடுத்து, அதன் ஒரு பக்கம் கிறுகிறுவென கறுப்பு மையைத் தடவி, அதை வயிற்றுப் பகுதிக்குள் வைத்து மாவால் மூடிவிடுவார். மனைவியைக் கணவர் ‘கண்டுக்காமல்’ இருப்பதற்கான வசிய மருந்தைக் கணவர் வயிற்றில் வைத்து விட்டார் என்று இதற்கு அர்த்தம்!

சத்தமாக வரும் மந்திர உச்சாடனம், அடிக்கடி உறுமும் சப்தம், எலுமிச்சம் பழத்தில் குங்குமம் தடவிப் பிழிவதால் ரத்தம் சொட்டுவது போன்ற தோற்றம், படபடவென எரியும் விளக்கு, கமகமவென வரும் ஊதுபத்தி வாசனை, தீக்கனல் நிறைந்த தூபக்காலில் தொடர்ந்து போடப்படும் சாம்பிராணிப் புகை போன்றவை அந்த இடத்தையே அமானுஷ்யமானதாக மாற்றிவிடும். பூஜை முடிய சுமார் ஒன்றரை மணி நேரம் ஆகும்.

‘உன் கணவர் உன்னை அடிச்சதாகச் சொன்னியே, எந்தக் கையால் அடிச்சார்?’ என அந்த ஜோதிடர் கேட்க, ‘வலது காலால் எட்டி உதைச்சார்’ என அந்தப் பெண் ரொம்பவே சின்சியராகச் சொல்லுவாள். ‘அப்படியா...’ என்று சொல்லியவாறே, ஓர் ஆணியை எடுத்து, அந்த மாவுப்பொம்மையின் வலது காலில் அறைந்து விட்டு, ‘இப்ப உன் கணவர் வலது கால் வலியால் துடிப்பார்’ என்று எகத்தாளமாகச் சிரிப்பார். உண்மையா பொய்யா என்ற முடிவுக்கு வரமுடியாமல், அந்தப் பெண் மிரண்டு போய் கைகளைக் கூப்பியவாறே இருப்பாள்.

‘இனி உன் கணவரைப் பற்றிக் கவலையே பட வேண்டாம். நீ எது செய்தாலும் கண்டுக்க மாட்டார். அவரைக் கட்டிப் போட்டாச்சு. நீ பத்து நாள் கழித்து வா. நீ நேசிக்கும் நபரை வசியம் செய்வதற்கான ஏற்பாட்டைச் செய்கிறேன். அதற்குத் தனியாக ஏதும் கட்டணம் வேண்டாம். தட்சணையாக நூற்றியரு ரூபாய் போதும். இப்ப நீ திரும்பிப் பார்க்காமல் போய் விடு’ என்பார்.

மீண்டும் பத்துநாள் கழித்து வரும் அந்தப் பெண்ணிடம், சின்ன மை டப்பாவைக் கொடுத்து, ‘இதிலுள்ள மையை எடுத்து உன் வலது புருவத்தில் தேய்த்துக்கொள். குறிப்பாக, அந்த நபர் உன்னிடம் பேச வரும்போது, இந்த மை உன் புருவத்தில் இருப்பது அவசியம். ஸ்டிக்கர் பொட்டுக்குப் பதிலாக இதைச் சாந்துப் பொட்டு போல் வைத்துக் கொண்டால், கூடிய சீக்கிரத்திலேயே அந்த நபர் உன் பக்கம் வந்திடுவார்!’ எனச் சொல்லி அனுப்புவார். அந்தப் பெண்ணும் ஏதோ அட்சயபாத்திரம் போல அதை பவ்யமாக வாங்கிப்போவாள்!’’ என்றனர் மாந்திரீகவாதிகளின் உதவியாளர்கள்.


[You must be registered and logged in to see this image.]
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.[You must be registered and logged in to see this image.]

நண்பன்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:-: 74976
சேர்ந்தது:-: 29/10/2010

Back to top Go down

Sticky Re: மன்மத வசியம் வைக்கும் குடும்பப் பெண்கள்!!

Post by நண்பன் on Thu 26 May - 1:20

மதுரையில் பிரபலமான கேரள மாந்திரீகர் ஒருவரிடம் கேட்டபோது, அவர் சொன்ன வசிய முறைகள் நம்மைக் கிறுகிறுக்க வைத்தன.

‘‘பெரும்பாலும் பணம், உடல் சுகம் ஆகிய இரண்டுக்காகவும்தான் வேறு ஆண்களை வசியம் செய்யக்கேட்டு பெண்கள் வருகிறார்கள். நாங்களும் செய்து கொடுப்போம். மாந்திரீக மார்க்கத்தில் இதற்குப் பல வழிமுறைகள் இருக்கின்றன. அதில் மருந்து கொடுத்து வசியம் செய்வது ஒரு முறை.

உதாரணத்துக்கு ஒன்றை மட்டும் சொல்கிறேன். புல்லாமணக்கு, கொட்டைப் பாக்கு, திகைப்பூண்டு ஆகியவற்றை வைத்து வசிய மருந்து தயாரிக்கலாம். ஆணை நேசிக்கும் பெண், காலையில் முதலில் போகும் தனது சிறுநீரை எடுத்து, அதில் கொட்டைப் பாக்கை மூன்று நாள் ஊறவிட வேண்டும். பின்னர் அதை எடுத்து புல்லாமணக்கு, திகைப்பூண்டு ஆகியவற்றுடன் தண்ணீர் சேர்க்காமல் அரைக்க வேண்டும். அரைத்த அந்தப் பொடியை, யாரை விரும்புகிறாளோ அவர் சாப்பிடும் சோற்றிலோ அல்லது குடிக்கும் காபியிலோ கலந்துவிட்டால், பத்து நாட்களுக்குள் அந்தப் பெண்ணே கதியென அவர் கிடப்பார்!

‘ரதிமன்மத வசியம்’ என்றும் ஒன்று உண்டு. அதாவது பித்தளையால் செய்யப்பட்ட சிறிய ஆண், பெண் உருவங்களை (சிலை) வைத்து, அதில் அந்தப் பெண்ணின் படத்தையும் அவள் விரும்பும் ஆணின் படத்தையும் வைத்து பூஜை செய்வோம். இந்தப் பூஜை நள்ளிரவு 12 மணிக்குத் தொடங்கி 2 மணிக்கு முடியும்படி செய்ய வேண்டும். பிறகு மஞ்சள் நூலால் அந்தச் சிலைகளை ஒன்றின் முகத்தை ஒன்று பார்த்தவாறு இறுகக் கட்டி, சுடுகாட்டின் ஓர் ஓரத்தில் ஆழமாகக் குழி தோண்டிப் புதைத்து வைத்துவிடுவோம். நாற்பது நாட்களில் நல்ல பலனைத் தரும்.

அதே நேரத்தில், தன் கணவனைத் தன்னிடமிருந்து விரட்டவேண்டும் என வரும் பெண்களுக்கும் இதே மாதிரி சிலை வைத்து பூஜை செய்வோம். ஆனால், பூஜை முடிந்த பிறகு சிலைகளின் முதுகும் முதுகும் ஒட்டியவாறு வைத்து கறுப்பு நூலால் கட்டி, அதே போல சுடுகாட்டில் புதைத்து வைத்துவிடுவோம். மீண்டும் எந்தக் காலத்திலும் அவர்கள் சேரவே மாட்டார்கள். அப்படிச் சேர விரும்பினால் மீண்டும் பூஜை செய்ய, முன்பை விட மூன்று மடங்கு ரேட் ஆகும். அதாவது பதினைந்தாயிரம் ரூபாய் ஆகும். பித்தளைச் சிலைகளுக்குப் பதிலாக மரப்பாச்சி பொம்மையை வைத்தும் பூஜை செய்வதும் உண்டு’’ என்று விளக்கி நமக்கு திகிலூட்டினார்.

‘இது தவறில்லையா?’ என நாம் கேட்டபோது, தாடியைத் தடவியவாறே அவர் தொடர்ந்தார். ‘‘என்னிடம் ஒரு பெண் வந்தாள். ‘நான் ஒரு கம்பெனியில் ரிசப்ஷனிஸ்டாக இருக்கிறேன். என் முதலாளியுடன் எனக்குத் தொடர்பு இருக்கு. அதை நிரந்தரமாக்கணும்’ என்று சொன்னாள். எதுக்குன்னு கேட்டேன். ‘எனக்கு இரண்டு பசங்க. எட்டாவது, பத்தாவது படிக்கிறாங்க. என் கணவர் வேலையேதும் பார்க்கவில்லை. நான் சம்பாதிக்கிறதையும் பறிச்சிட்டு போய் குடிச்சிட்டு வந்துடறார். குடிக்கிறதுக்காக எக்கச்சக்கமாகக் கடனும் வாங்கிவிட்டார். ஒருநாள் நான் வீட்டுக்குப் போன போது, கடன் கொடுத்தவங்க குழந்தைகளையும் அவரையும் வெளியே தள்ளிவிட்டு வீட்டைப் பூட்டிட்டுப் போயிருந்தாங்க. அப்ப நான் என் முதலாளியிடம் போய்த்தான் பணம் வாங்கினேன். என் கணவரோட குடிப்பழக்கத்தை நிறுத்த நான் செய்த மருத்துவ சிகிச்சையெல்லாம் வீணாத்தான் போனது. இதற்கும் என் முதலாளிதான் பணம் தந்தார். அவர் இல்லைன்னா நான் குழந்தைகளோடு பிச்சைதான் எடுக்கணும். எனக்கு என் பிள்ளைகளோட எதிர்காலம் முக்கியம். அதுக்கு என் முதலாளி என்னோடு இருப்பது அவசியம்’ என்றாள். இந்தப் பெண்ணுக்கு வசியம் செய்து கொடுப்பது சரியா தவறா? என்ன சொல்றீங்க?’’ என நம்மிடமே எதிர்க்கேள்வி எழுப்பினார் அவர்.

மதுரையில், குரு ஜோதிடர் ராஜன் என்பவரை சந்தித்துக் கேட்டோம்.

‘‘எங்கிட்டேயும் இதுமாதிரி செய்துதரக் கேட்டு பெண்கள் சிலர் வர்றாங்க. நான் அதெல்லாம் செய்யறதில்லை. ஜாதகரீதியாக எது நடக்கணுமோ, அதுதான் நடக்கும்னு சொல்லி அனுப்பிடுவேன். ஆனால், அப்படிச் செய்யக்கூடியவங்க இருக்காங்க. கொல்லிமலை, பரமக்குடி பக்கம் எமனேஸ்வரம் போன்ற இடங்களில் ரொம்பவே நுணுக்கமானவங்க இருக்காங்க. ஆனால், அங்கேயும் டூப்ளிகேட்டும் உண்டு. அங்கே போய் எல்லாவற்றையும் இழந்துவிட்டு வந்தவங்களும் ரொம்பப் பேர்!’’ என்றார் குரு ஜோதிடர் ராஜன்.

மதுரையில் இருக்கிறார், ஹடயோகி பாஸ்கரன். ஆவியுடன் பேசுபவர். ஜாதகம் பார்ப்பவர். மாந்திரீகர். அரசியல் வி.ஐ.பி.கள் சிலர் இவரிடம் கேட்டுவிட்டுத்தான் பல் கூட தேய்க்கிறார்கள். சுமார் முப்பது ஆண்டுகளாக இதே தொழிலில் இருக்கிறார். கேரளத்தைச் சேர்ந்தவர். அவரிடம் பேசினோம்.

‘‘தன் கணவன் தன்னிடம் அன்பாக இல்லை. அதற்கு வசியம் செய்யணும்னு நிறையப் பெண்கள் வர்றாங்க. இப்ப அது அதிகரிச்சுக்கிட்டுத்தான் இருக்கிறது. நான் அந்தப் பெண்களிடம் சொல்வதெல்லாம் சிம்பிள் வழிதான். ‘ஸ்டிக்கர் பொட்டுக்குப் பதில் குங்குமப் பொட்டு வை. காலையில் மூணு மணியிலிருந்து ஆறு மணிக்குள் எழுந்து கணவன் கால் பெருவிரலைத் தொட்டுக் கும்பிடு. கும்பிட்ட பிறகு வேண்டுமானால், படுத்துத் தூங்கிக்கொள். கறுப்பு நிறச் சேலையை அடிக்கடி கட்டாதே. அதுபோல வெள்ளை நிறச் சேலையும் வேண்டாம். மஞ்சள் நிறச்சேலை நல்லது. கணவனை உன் பக்கம் இழுக்கும்’ என்று செலவில்லாத வசியங்களை பெண்களுக்குச் சொல்கிறேன்.

அதே நேரத்தில் நிறைய மாந்திரீக வேலைகளும் செய்கிறேன். ஆனால், அது நல்ல விஷயங்களுக்காகவும் ஒருத்தரை வாழவைப்பதற்காகவும்தான் இருக்கும். ஒருத்தன் பொண்டாட்டி இன்னொருத்தரைக் கூட்டிட்டுப் போறதுக்கு என் மாந்திரீக சக்தியை நான் பயன்படுத்துவதில்லை’’ என்றார் ஹடயோகி பாஸ்கரன்.

‘‘இந்த மந்திர தந்திரங்களெல்லாம் காக்காய் உட்காரப் பனம்பழம் விழுந்த கதைதான். பெரும்பாலான நேரங்களில் ஜோதிடர்கள், மாந்திரீகர்கள் சொல்வதும், செய்வதும் இந்தப் பெண்களுக்குப் பலிப்பதில்லை. ஆனாலும் பெண்களால் இதை வெளியே சொல்ல முடியாது. கொடுத்த பணத்தைத் திரும்பப் போய்க் கேட்கவும் முடியாது. திருடனுக்குத் தேள் கொட்டிய கதைதான். சில நேரங்களில் அந்த ஜோதிடர்களுக்கும் மாந்திரீகர்களுக்குமே இவர்கள் இரையாகிவிடும் கொடுமையும் நடக்கத்தான் செய்கிறது’’ என்கிறார்கள் விஷயம் தெரிந்த சிலர்.

இப்படி திருமணமான சில பெண்கள், பிற ஆண்களை வசியம் வைத்துக் கவரும் அளவுக்குச் செல்லக் காரணம், கணவன் மனைவியிடையேயான பரஸ்பர அன்பு, நம்பிக்கை, விட்டுக்கொடுக்கும் தன்மை ஆகியவை இல்லாததுதான். இது வந்து விட்டால் இந்தத் தவறுகள் காணாமல் போய்விடும். மந்திர தந்திர வசிய விவகாரங்களுக்கும் அங்கே இடமிருக்காது என்பதுதான் உண்மை!

நன்றி இளமை.


[You must be registered and logged in to see this image.]
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.[You must be registered and logged in to see this image.]

நண்பன்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:-: 74976
சேர்ந்தது:-: 29/10/2010

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum