சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» தை பிறந்தால் வழி பிறக்க வருக
by கவிப்புயல் இனியவன் Sun 14 Jan 2018 - 2:47

» நீங்களும் வைரம்தான் சார்.....!!
by பானுஷபானா Fri 12 Jan 2018 - 15:56

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 11 Jan 2018 - 14:44

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 9 Jan 2018 - 18:06

» துபாய்: லாட்டரியில் 2.1 கோடி திர்ஹம் வென்ற இந்தியர் - ஏழைகளுக்கு உதவ விருப்பம்
by பானுஷபானா Tue 9 Jan 2018 - 13:31

» விபத்தில் சிக்கியவரை விரைந்து காப்பாற்றிய தஞ்சை செந்தில்குமார்... நெகிழவைக்கும் சம்பவம்!
by பானுஷபானா Mon 8 Jan 2018 - 15:52

» அகமதாபாத்தில் தொடங்கியது சர்வதேச காற்றாடி திருவிழா
by *சம்ஸ் Mon 8 Jan 2018 - 13:52

» பெண்கள் இருசக்கர வாகனம் வாங்க மானிய உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்வு: ஆளுநர் உரையில் அறிவிப்பு
by *சம்ஸ் Mon 8 Jan 2018 - 13:49

» சேனையின் நுழைவாயில்.
by பானுஷபானா Mon 8 Jan 2018 - 11:12

» சவூதி மன்னர் அரண்மணை முற்றுகை: 11 இளவரசர்கள் கைது
by rammalar Sun 7 Jan 2018 - 15:03

» தமிழக காங்., தலைவராக திருநாவுக்கரசர் நீடிப்பு
by rammalar Sun 7 Jan 2018 - 15:02

» இன்டர்நெட் பயன்பாட்டை மேம்படுத்த புதிய செயற்கைகோள் : இஸ்ரோ
by rammalar Sun 7 Jan 2018 - 15:00

» 2018-ம் ஆண்டுக்கான அரசு பணியாளர் தேர்வாணைய அட்டவணை வெளியீடு
by rammalar Sun 7 Jan 2018 - 14:58

» பெரியார்-பாரதிதாசன் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமனம்
by rammalar Sun 7 Jan 2018 - 14:57

» தமிழக மக்களை, நல்லா வாழவைக்க வேண்டும் என்பதே என் அதிகபட்ச ஆசை மலேசியா கலை நிகழ்ச்சியில் ரஜினி பேச்சு
by rammalar Sun 7 Jan 2018 - 14:56

» துப்புரவு பணிதான் மிகவும் கடினமானது’ நடிகர் சசிக்குமார்
by rammalar Sun 7 Jan 2018 - 14:55

» போயஸ் கார்டனில் பாதாள அறையா?
by rammalar Sun 7 Jan 2018 - 14:53

» நாமக்கல்லில் பறவைக்காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
by rammalar Sun 7 Jan 2018 - 14:52

» திமுக மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் 11 தீர்மானம்
by rammalar Sun 7 Jan 2018 - 14:51

» தினகரன் பண்ணை வீட்டில் சோதனை
by rammalar Sun 7 Jan 2018 - 14:49

» எல்லையில் கூவி,கூவி விற்கப்படும் ராணுவ சீருடைகள்:பாதுகாப்பு கேள்வி குறி
by rammalar Sun 7 Jan 2018 - 14:41

» நான்கு வருசமாச்சு! லோக்பால் என்னாச்சு ! மோடிக்கு ராகுல்காந்தி கேள்வி
by rammalar Sun 7 Jan 2018 - 14:38

» அமெரிக்க பார்லி.,க்கு இந்திய வம்சாவளி பெண் போட்டி
by rammalar Sun 7 Jan 2018 - 14:37

» சச்சின் மகளுக்கு தொந்தரவு: மேற்கு வங்க வாலிபர் கைது
by rammalar Sun 7 Jan 2018 - 14:36

» ஆபரேசன் சக்சஸ் ஆயிடுச்சுனு சொல்லு….!
by *சம்ஸ் Thu 4 Jan 2018 - 13:51

» Again raghavaa
by *சம்ஸ் Wed 3 Jan 2018 - 14:22

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Fri 29 Dec 2017 - 22:23

» மனசு : பனியில் நனைந்த பாலை
by பானுஷபானா Tue 26 Dec 2017 - 13:08

» சேனைத்தமிழ் உலாவின் அனைத்து நிர்வாகிகளுடன் மூன்று தலைகளையும் காணவில்லையாம்.
by *சம்ஸ் Sat 23 Dec 2017 - 13:31

» kings usa university in சிறந்த மனிதநேயத்திற்கான விருது கேரளாவை சேர்ந்த முஹம்து ஈசாவிற்கு.
by *சம்ஸ் Wed 20 Dec 2017 - 13:36

» முட்டை போடும் மூன்று உயிரினம்…!!
by *சம்ஸ் Wed 20 Dec 2017 - 13:29

» பின்தங்கிய கிராமங்க…இன்னும் டெங்கு வரலை!!
by பானுஷபானா Fri 15 Dec 2017 - 12:32

» ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான்
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:19

» குதிரை ஓட்டி - முத்துக்கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:17

» பதிலடி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:17

.

சிவாஜியின் வாழ்க்கைக் குறிப்பு

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

Sticky சிவாஜியின் வாழ்க்கைக் குறிப்பு

Post by நண்பன் on Wed 15 Dec 2010 - 14:31


பிறந்த ஊர்சிவாஜி கணேசனின் பூர்வீகம் தஞ்சை மாவட்டத்தில் உள்ள வேட்டைத்திடல் என்ற கிராமம். இது மிகவும் செழிப்பானது. அவருடைய தந்தை சின்னையா மன்றாயரின் குடும்பம் அங்குதான் வசித்தது. தாயார் பெயர் ராஜாமணி அம்மாள். அவருடைய தகப்பனார் பெயர் சின்னச்சாமி காளிங்கராயர், அவர் ரெயில்வேயில் அதிகாரியாக பதவி வகித்தவர். திருச்சி, மதுரை பகுதியில் ரெயில்பாதை போடப்பட்டபோது, அதற்கு அவர் பொறுப்பாக இருந்தார்.

சின்னச்சாமி காளிங்கராயருக்கு 11-வதாக பிறந்த குழந்தை ராஜாமணி அம்மாள்! மகள் மீது காளிங்கராயருக்கு மிகுந்த பாசம். எனவே ``ராஜாமணி எப்போதும் நம்முடன் இருக்க வேண்டும். ஒரு நல்ல மாப்பிள்ளைக்கு கல்யாணம் செய்து கொடுத்து, பெண்ணையும் மாப்பிள்ளையையும் வீட்டோடு வைத்துக்கொள்ள வேண்டும்" என்று எண்ணினார்.

சிவாஜியின் தந்தை சின்னையா மன்றாயர் அதிகம் படிக்காதவர். ஆயினும் ஒரு மிராசுதார். எனவே, அவருக்கு ராஜாமணியை திருமணம் செய்து கொடுத்து, வீட்டோடு மாப்பிள்ளையாக வைத்துக்கொண்டார். எனினும் சில காலத்துக்குப்பின் சின்னையா மன்றாயர் ரெயில்வேயில் வேலைக்கு சேர்ந்தார். நாகப்பட்டினத்தில் இருந்த ரெயில்வே ஒர்க்ஷாப்பில் வேலை பார்த்தார். மனைவியுடன் அங்கு குடியேறினார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சிவாஜியின் வாழ்க்கைக் குறிப்பு

Post by நண்பன் on Wed 15 Dec 2010 - 14:32

சிவாஜி பிறந்தார்

சின்னச்சாமி காளிங்கராயர் வீடு விழுப்புரத்தில் இருந்தது. பிரசவத்துக்காக அங்கு ராஜாமணி அம்மாள் சென்றார். அங்குதான் 1928 அக்டோபர் 1-ந் தேதி சிவாஜிகணேசன் பிறந்தார்.

சிவாஜியின் தந்தை சின்னையா மன்றாயர், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபாடு கொண்டவர்.

சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் சிலர், தீவரவாத எண்ணம் கொண்டவர்கள். ``அகிம்சை மூலம் வெள்ளையர்களைப் பணிய வைக்க முடியாது.

துப்பாக்கி ஏந்தினால்தான், நாட்டைவிட்டு ஓடுவான்" என்ற நேதாஜியின் கொள்கையை கடைபிடிப்பவர்கள்.அப்போதெல்லாம், ஒரு காரியத்தை நடத்துவது யார் என்று திருவுளச்சீட்டு போட்டுப்பார்ப்பார்கள். ``ஆஷ் துரையை சுட்டுக்கொல்வது யார்?" என்று தீவிரவாத இளைஞர்கள் சீட்டு போட்டு பார்த்தபோது, வாஞ்சிநாதன் பெயர் வந்தது. அதனால், அவர், மணியாச்சி ஜங்ஷனில் ஆஷ்துரையை சுட்டுக்கொன்று விட்டு தன்னைத்தானே சுட்டுக்கொண்டு, தற்கொலை செய்து கொண்டார். இதேபோல, வெள்ளைக்கார சிப்பாய்கள் செல்லும் ரெயிலுக்கு யார் வெடி வைப்பது என்று, சின்னையா

மன்றாயரும் அவர் நண்பர்களும் திருவுளச் சீட்டு போட்டுப்பார்த்தார்கள். அதில் சின்னையாவின் பெயர் வந்தது. அதனால் ரெயிலுக்கு அவர் வெடி வைத்தார். போலீசார் இதைப்பார்த்துவிட்டார்கள். அவரை துரத்திச் சென்றார்கள். சின்னையா தப்பி ஓடும்போது, அவரை நோக்கி போலீசார் சுட்டனர். சின்னையா கீழே விழுந்தார். போலீசார் அவரை சூழ்ந்து கொண்டு தடியால் தாக்கினர். சின்னையா தலையில் பலத்த காயம் அடைந்தார்.

அவரை கைது செய்து, வேலூருக்கு கொண்டுபோய், ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். போலீஸ் காவலுடன் சிகிச்சை பெற்றார். அவர் குணம் அடைந்த போதிலும், காது சரியாகக் கேட்கமுடியாமல் போய்விட்டது. சின்னையா மன்றாயர் கைது செய்யப்பட்ட அதே நாளில்தான் சிவாஜி பிறந்தார்!

7 ஆண்டு ஜெயில் ரெயிலுக்கு வெடி வைத்ததாக சின்னையா மன்றாயர் மீது வழக்கு தொடரப்பட்டது. அதில் அவருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

``மருமகன் ஜெயிலுக்கு போய்விட்டாரே" என்று சிவாஜியின் தாத்தா மனம் நொந்தார். நாளுக்கு நாள், உடல் நலிந்தது. சிலகாலத்துக்குப்பின் அவர் மரணம் அடைந்தார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சிவாஜியின் வாழ்க்கைக் குறிப்பு

Post by நண்பன் on Wed 15 Dec 2010 - 14:32

அண்ணன்கள்

சிவாஜிக்கு திருஞான சம்பந்த மூர்த்தி, கனக சபாநாதன், தங்கவேலன் என்று மூன்று அண்ணன்கள். சிவாஜிக்கு சூட்டப்பட்ட பெயர் கணேசமூர்த்தி .தம்பி சண்முகம், தங்கை பத்மாவதி.சிவாஜியின் தாத்தா இறந்துபோன பிறகு, ராஜாமணியம்மாள் குடும்பத்துடன் திருச்சியில் குடியேறினார். திருச்சி அருகே, பொன்மலைக்குப் பக்கத்தில் உள்ள சங்கிலியாண்டபுரத்தில் ராஜாமணி அம்மாள் குடும்பத்துக்கு ஒரு வீடு இருந்தது. அங்கு வசிக்கலானார். சிவாஜிகணேசன் வளர்ந்தது, நாடக நடிகரானது, சினிமா உலகில் புகுந்தது எல்லாமே இந்த வீட்டில் வசித்த போதுதான்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சிவாஜியின் வாழ்க்கைக் குறிப்பு

Post by நண்பன் on Wed 15 Dec 2010 - 14:32

``பால்காரம்மா"

எஸ்.எஸ்.வாசனின் தாயாரும், எம்.ஜி.ஆரின் தாயாரும் தங்கள் குடும்பத்தை காப்பாற்ற எப்படி கஷ்டப்பட்டார்களோ, அதுபோல் ராஜாமணி அம்மாளும் மிகவும் கஷ்டப்பட்டார். `தந்தையோ இறந்து போய்விட்டார். கணவர் சிறை சென்று விட்டார். பிழைக்க என்ன செய்வது? குழந்தைகளை எப்படி படிக்க வைப்பது' என்று யோசித்த ராஜாமணி அம்மாள், பால் வியாபாரம் செய்ய முடிவு செய்தார். கறவை மாடு வாங்கி, பால் விற்கத் தொடங்கினார். நாளடைவில், ராஜாமணி அம்மாள் என்ற பெயர் மறைந்துபோய், ``பால்காரம்மா" என்ற பெயர் நிலைத்து விட்டது!

வீட்டுக்கு அருகே கிறிஸ்தவ பள்ளிக்கூடம் ஒன்று இருந்தது. அங்கு சிவாஜியை சேர்த்துவிட்டார், ராஜாமணி அம்மாள். அப்போது சிவாஜிக்கு 4 வயது.தந்தை விடுதலை. சிறையில் இருந்த சின்னையா மன்றாயர், நல்ல மெக்கானிக் என்பதால் சிறையில் மின்சாரம் சம்பந்தப்பட்ட வேலைகளை செய்வது, தண்ணீர் டாங்க்கை பழுது பார்ப்பது போன்றவற்றை செய்து, சிறை அதிகாரிகளிடம் நல்ல பெயர் வாங்கினார்.எனவே நன்னடத்தைக்காக, 7 வருட தண்டனை 4 ஆண்டு தண்டனையாகக் குறைக்கப்பட்டு, விடுதலை செய்யப்பட்டார்.

விடுதலையாகி வீடு திரும்பினார், சின்னையா மன்றாயர். அப்போது சிவாஜிக்கு 4 வயது. ``இவர்தான் உன் அப்பா" என்று, தன் கணவரைக் காண்பித்தார், ராஜாமணி அம்மாள். கண்களில் கண்ணீர் வழிய, தந்தையைக் கட்டித் தழுவிக் கொண்டார், சிவாஜி. சுதந்திரப் போராட்டத்தில் சிவாஜியின் தந்தைக்கு 7 ஆண்டு ஜெயிலில்!- தந்தை கைதான நாளில் சிவாஜி பிறந்தார்பராசக்தி வெளிவந்த பின், ``யார் இந்த சிவாஜி கணேசன்?" என்ற கேள்வி நான்கு திசைகளிலும் எதிரொலித்தது. அவருடைய வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்ள, ரசிகர்கள் ஆவல் கொண்டனர்.இதனால், அவர் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை பல்வேறு பதிப்பகங்கள் வெளியிட்டன. பத்திரிகைகள் அவரை பேட்டி கண்டு, படங்களுடன் பக்கம் பக்கமாக வெளியிட்டன.

7 வயதில் நாடகக் கம்பெனியில் சேர்ந்தார், சிவாஜி சிவாஜி கணேசன், 7-வது வயதிலேயே நாடகக் கம்பெனியில் சேர்ந்து நடிகரானார்.பள்ளிக்கூடத்தில் படிக்கும்போதே, சிவாஜிக்கு நடிப்பதிலும், பாடுவதிலும் ஆர்வம் இருந்தது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சிவாஜியின் வாழ்க்கைக் குறிப்பு

Post by நண்பன் on Wed 15 Dec 2010 - 14:33

நடிப்புக்கு வித்திட்ட நிகழ்வு

ஒருமுறை, ``வீரபாண்டிய கட்டபொம்மன்" நாடகத்தைப் பார்க்க தந்தையுடன் சென்றார்.

அக்காலத்தில், சின்ன வேடங்களுக்கு ஆட்கள் தேவைப்பட்டால், நாடகத்துக்கு வரும் சிறுவர்களில் சிலரை அழைத்துப் போய், மேடையில் ஏற்றி விடுவார்கள்.``கட்டபொம்மன்" நாடகத்தில், வெள்ளைக்கார சிப்பாய் வேடத்தில் நடிக்க சிலர் தேவைப்பட்டதால், சிவாஜியை நாடகக்காரர்கள் அழைத்துச் சென்றுவிட்டார்கள். வெள்ளைக்கார சிப்பாய்கள் அணிவகுத்து வரும் காட்சியில், அந்த சிப்பாய்களில் ஒருவராக சிவாஜியும் நடந்து வந்தார்.

நாடகம் முடிந்து வீட்டுக்குச் சென்றதும், சிவாஜிக்கு அவர் அப்பாவிடம் உதை கிடைத்தது! ஏனென்றால் தேசியவாதியான சின்னையா மன்றாயருக்கு வெள்ளைக்காரர்கள் என்றாலே பிடிக்காது. சிவாஜி, வெள்ளைக்கார சிப்பாய் வேடம் போட்டதால், அவருக்கு அளவு கடந்த கோபம்! ``டேய், கூத்தாடிப் பயலே! உனக்கு என்ன தைரியம் இருந்தால், என் எதிரியின் படையில் சேர்ந்து கூத்தாடுவாய்!" என்று கூறியபடி அடித்தார்.இதனால் சிவாஜிக்கு காய்ச்சல் வந்துவிட்டது. படுக்கையில் போய் விழுந்தார். ``நாமும் நடிகனாக வேண்டும். கட்டபொம்மனாக நடிக்க வேண்டும்" என்ற எண்ணம், மனதில் ஆழமாகப் பதிந்தது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சிவாஜியின் வாழ்க்கைக் குறிப்பு

Post by நண்பன் on Wed 15 Dec 2010 - 14:33

யதார்த்தம் பொன்னுசாமிபிள்ளை

இந்த நேரத்தில், யதார்த்தம் பொன்னுசாமிப்பிள்ளையின் ``மதுரை ஸ்ரீபாலகான சபா" என்ற நாடகக்கம்பெனி திருச்சியில் முகாமிட்டு நாடகங்கள் நடத்தி வந்தது.
(யதார்த்தம் பொன்னுசாமிபிள்ளை, என்.எஸ்.கிருஷ்ணன் நடித்த பெரும்பாலான படங்களில் அவருடன் நடித்தவர். பிற்காலத்தில் சிவாஜி நடித்த ``தூக்கு தூக்கி"யில், வாத்தியாராக நடித்தவர்.) இந்த நாடகக் குழுவில் சேர்ந்து விடவேண்டும் என்று சிவாஜி விரும்பினார். நாடகக் குழுவினர், திருச்சியில் நாடகங்கள் நடத்தி முடித்துவிட்டு, வெளியூருக்கு செல்ல ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தனர்.நாடகக் கம்பெனிக்கு சிவாஜி சென்றார். ``எனக்கு பாடத்தெரியும். ஆடத்தெரியும். நான் அப்பா- அம்மா இல்லாத அனாதை. நாடகத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள்" என்று கூறினார்.அப்போது சிவாஜி நன்றாகப் பாடும் அளவுக்கு பயிற்சி பெற்றிருந்தார். அவரை ஒரு பாட்டு பாடச் சொன்னார்கள். ``பழனிவேல் இது தஞ்சம்" என்ற பாடலை சிவாஜி பாடினார். நாடகக் கம்பெனிக்காரர்களுக்குப் பிடித்துவிட்டது. உடனே கம்பெனியில் சேர்த்துக் கொண்டார்கள்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சிவாஜியின் வாழ்க்கைக் குறிப்பு

Post by நண்பன் on Wed 15 Dec 2010 - 14:33

காக்கா ராதாகிருஷ்ணன்

அப்போது, அந்தக் கம்பெனியில் காக்கா ராதாகிருஷ்ணனும் நடிகராக இருந்தார். அவர், சிவாஜியின் பக்கத்து வீட்டுக்காரர். சிவாஜியைப் பார்த்த அவருக்கு ஒரே ஆச்சரியம்.

``இங்கே எப்படியடா வந்தாய், கணேசா!" என்று கேட்டார். ``நான் வீட்டுக்கு தெரியாமல் இந்த கம்பெனியில் வந்து சேர்ந்துவிட்டேன். வெளியே யாரிடமும் சொல்லிவிடாதே" என்று சிவாஜி கேட்டுக்கொண்டார். நாடகக் கம்பெனி, திருச்சியில் இருந்து திண்டுக் கல்லுக்கு சென்று முகாமிட்டது. அந்த நாடகக் கம்பெனியில், புது நடிகர்களுக்கு பயிற்சி

அளிக்கும் வாத்தியாராக சின்ன பொன்னுசாமி படையாச்சி என்பவர் இருந்தார். இவர்தான், சிவாஜி கணேசனுக்கு நடிப்புப் பயிற்சி அளித்தார்.``சின்ன பொன்னுசாமிதான் என் நாடக குரு" என்று சிவாஜி குறிப்பிட்டுள்ளார்.

சிவாஜி நடித்த முதல் நாடகம் ``ராமாயணம்" அதில் அவர் போட்ட வேடம் சீதை. ``யாரென இந்தப் புருஷனை அறிகிலேன்" என்ற பாட்டைப்பாடி, அதற்கு ஏற்ற மாதிரி ஆட்டம் ஆடி நடித்தார். முதல் நாளே சிறப்பாக நடித்தார், சிவாஜி. வேஷத்தை கலைத்து உள்ளே சென்றபோது, வாத்தியார் பொன்னுசாமி அவர் முதுகில் தட்டிக்கொடுத்து, ``மிகவும் நன்றாக நடித்தாய்" என்று பாராட்டினார். நாட்கள் ஆக ஆக, புதுப்புது வேடங்களை ஏற்று நடித்தார், சிவாஜி. சீதை வேஷம் போட்ட அவர், பிறகு பரதன் வேடம் போட்டார். சூர்ப்பனகை அழகியாக மாறி ராமனை மயக்கும் கட்டத்தில், அந்த அழகு சூர்ப்பனகையாக நடித்தார்.

ராவணனின் மகன் இந்திரஜித் வேடமும் அவருக்கு கிடைத்தது. இப்படி, சிறுவனாக நாடகங்களில் நடித்தபோதே, மாறுபட்ட வேடங்களில் நடிக்கும் ஆற்றலைப் பெற்றார்.

பல்வேறு நாடக வசனங்கள் அவருக்கு மனப்பாடம். எனவே, திடீரென்று எந்த வேடத்தையும் கொடுத்து நடிக்கச் சொன்னாலும், அவர் ஏற்று நடித்தார்.அந்தக் காலத்தில், நாடகத்தில் நடிக்கும் சிறுவர்கள் வெளியே எங்கேயும் போக முடியாது. கம்பெனியின் வீட்டிலேயே அடைந்து கிடக்க வேண்டும். ``சிறை" வைக்கப்பட்டது மாதிரிதான். ``ஊருக்கு வா" என்று பெற்றோர் கடிதம் எழுதினால், அதை பையன்களிடம் கொடுக்கமாட்டார்கள். கடிதங்களைப்பிரித்து படித்துப்பார்த்துவிட்டு, கொடுக்கக்கூடியதாக இருந்தால் மட்டும் கொடுப்பார்கள்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சிவாஜியின் வாழ்க்கைக் குறிப்பு

Post by நண்பன் on Wed 15 Dec 2010 - 14:34

அண்ணன்கள் மரணம்

ஒரு முறை காக்கா ராதாகிருஷ்ணன் கெஞ்சிக் கூத்தாடி, எப்படியோ அனுமதி பெற்று ஊருக்கு போய்விட்டு வந்தார். ``என்ன ராதாகிருஷ்ணா! என் வீட்டுக்குப் போனாயா? எல்லோரும் சவுக்கியமா?" என்று சிவாஜி விசாரித்தார். ``எல்லோரும் நன்றாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் உனக்கு ஒரு துயரச்செய்தி கணேசா!" என்று கூறினார்,

ராதாகிருஷ்ணன். ``என்ன?" என்று பதற்றத்துடன் சிவாஜி கேட்க, ``உன் அண்ணன் திருஞான சம்பந்தமூர்த்தி இறந்துவிட்டார்" என்று கூறினார், காக்கா ராதாகிருஷ்ணன்.

சிவாஜி பதறினார். உள்ளே சென்று தனியாக அழுதார். ஊருக்குப் போய்வர கம்பெனி நிர்வாகிகளிடம் அனுமதி கேட்டார். அவர்கள் அனுதாபம் தெரிவித்தார்களே தவிர, அனுமதி தரவில்லை. சில காலத்துக்குப் பிறகு, சிவாஜியின் இன்னொரு அண்ணன் கனகசபாநாதனும் இறந்துபோனார். அப்போதும் சிவாஜி தன் வீட்டுக்குப் போக முடியவில்லை. முக்கிய வேடங்களில் அவர் நடித்து வந்ததால், ஒரு நாள் கூட விடுமுறை கொடுக்க நாடகக் கம்பெனி நிர்வாகிகள் மறுத்துவிட்டனர்.

5 ஆண்டுகளுக்குப்பின் பெற்றோரை சந்தித்தார், சிவாஜி- எம்.ஆர். ராதா நாடகக்குழுவில் சேர்ந்தார் பொதுவாக, நாடகங்களில் தொடர்ந்து பெண் வேடம் போடும் சிறுவர்கள் நடப்பது, பேசுவது எல்லாம் பெண்கள் போலவே மாறிவிடுவது உண்டு.ஆனால், சிவாஜிகணேசன் பெண் வேடம் மட்டும் அல்லாமல் ஆண் வேடங்களும், மாறுபட்ட வேடங்களும் ஏற்று நடித்தார். அதனால் எதிர்காலத்தில் எந்த வேடம் கொடுத்தாலும், அதை சிறப்பாக செய்யக்கூடிய ஆற்றலைப் பெற்றார்.எம்.ஆர்.ராதா சிவாஜி நடித்து வந்த நாடகக் கம்பெனியில், எம்.ஆர்.ராதாவும் நடிகராக சேர்ந்தார். ``பதிபக்தி" நாடகத்தில் சிவாஜி, சரஸ்வதி என்ற பெண் வேடத்தில் நடிப்பார். எம்.ஆர்.ராதா வில்லனாக நடிப்பார்.

``நாடகத்துறையில் ராதா அண்ணனுக்கு எல்லா வேலைகளும் தெரியும். அவர் ஒரு ஜீனியஸ்.

எலெக்ட்ரிக் வேலைகளும் செய்வார். காமெடி தெரியும். ஹீரோவாக நடிப்பார். வில்லனாக நடிப்பார். எல்லாவிதமான ரோல்களிலும் நடிப்பார்" என்று சிவாஜி கூறியுள்ளார்.

சிவாஜிகணேசன் நாடகக் குழுவினர் கோவைக்கு சென்ற போது, அங்கே உள்ள ஸ்டூடியோவில் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் ``சந்திரஹரி" என்ற நகைச்சுவை திரைப்படத்தைத் தயாரித்துக் கொண்டிருந்தார். அதில் என்.எஸ்.கே.யின் மகனாக காமெடி வேடத்தில் நடிப்பதற்கு ஒரு பையன் தேவைப்பட்டான். படக்கம்பெனியைப் சேர்ந்தவர்கள், சிவாஜியையும், காக்கா ராதாகிருஷ்ணனையும் அழைத்துச் சென்றனர். இந்த இருவரில் அவர்கள் தேர்வு செய்தது, காக்கா ராதாகிருஷ்ணனைத்தான். ``காக்கா ராதாகிருஷ்ணனுக்குத்தான், இயற்கையாகவே காமெடியான முகம் இருக்கிறது" என்று அவர்கள் கூறினார்கள். சிவாஜி கணேசனை, நாடகக்கம்பெனியில் கொண்டு போய் விட்டுவிட்டார்கள்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சிவாஜியின் வாழ்க்கைக் குறிப்பு

Post by நண்பன் on Wed 15 Dec 2010 - 14:34

பெற்றோருடன் சந்திப்பு

சிவாஜிக்கு 12 வயதான போது, நாடகக் குழுவினர் கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு சென்று முகாமிட்டனர். சிவாஜிக்கு பெற்றோரை பார்க்கவேண்டும் என்று ஆவல் அதிகரித்தது. ``தீபாவளிக்காவது என்னை ஊருக்கு அனுப்பி வையுங்கள்" என்று கம்பெனி நிர்வாகிகளிடம் கெஞ்சினார். அவர்கள் மனம் இரங்கி, சிவாஜியை அனுப்பி வைத்தனர். வீட்டுக்குப்போனதும், சிவாஜி முதலில் பார்த்தது தம்பி சண்முகத்தையும், தங்கை பத்மாவதியையும்தான். சிவாஜிகணேசன் குடும்பத்தைப் பிரிந்து நாடகக் கம்பெனியில் சேர்ந்தபோது, 3 அண்ணன்கள் மட்டுமே இருந்தனர். அவர்களில் 2 பேர் இறந்து

போய்விட்டார்கள். தான் நாடகக்கம்பெனில் சேர்ந்த பிறகு பிறந்த தம்பி சண்முகத்தையும், தங்கை பத்மாவதியையும் அப்போதுதான் முதன் முதலாக சிவாஜி பார்த்தார். பாசத்தோடு தழுவிக்கொண்டார். பல ஆண்டுகளுக்குப் பின் சிவாஜியைப் பார்த்த தாயார் ராஜாமணி அம்மாள் கண்ணீர்விட்டு அழுதார்.பிறகு தந்தையையும், அண்ணனையும் சிவாஜி சந்தித்தார். சிறிது நேரம் அவர்களால் பேசவே முடிவில்லை. அந்த தீபாவளியை பெற்றோருடனும், அண்ணன், தம்பி, தங்கையுடனும் கொண்டாடி மகிழ்ந்தார், சிவாஜி.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சிவாஜியின் வாழ்க்கைக் குறிப்பு

Post by நண்பன் on Wed 15 Dec 2010 - 14:34

ராதா வருகை

சில நாட்கள் குடும்பத்துடன் தங்கியிருந்தார், சிவாஜி. ஒரு நாள் எம்.ஆர்.ராதா ஜட்கா வண்டியில் அங்கு வந்தார். ``சில நாட்கள் உங்கள் வீட்டில் தங்கப்போகிறேன்" என்றார்.

``என்ன அண்ணே விசேஷம்?" என்று சிவாஜி விசாரித்தார். ``நான் பொன்னுசாமிபிள்ளை கம்பெனியில் இருந்து விலகி விட்டேன். சொந்தமாக நாடகக் கம்பெனி ஆரம்பிக்கப்போகிறேன். நீயும் அதில் சேரவேண்டும்" என்றார். சிவாஜிக்கு குழப்பமாகிவிட்டது. தனக்கு ஆதரவு தந்து, நடிப்பு கற்றுக்கொடுத்த கம்பெனியை விட்டு

விலகுவதா என்று யோசித்தார். அதே சமயம் ராதாவின் பேச்சை தட்டவும் முடியவில்லை. நீண்ட மனப்போராட்டத்துக்குப் பின் ராதாவுடன் செல்ல முடிவு செய்தார். இதுபற்றி தன் தாயாரிடம் கூறினார். ``ஏம்பா! பழைய கம்பெனியை விட்டு போகிறேன் என்கிறாயே. சரியாக இருக்குமா?" என்று தாயார் கேட்டார். ``நான் ராதா அண்ணனை நம்புகிறேன். அண்ணன் ஏதாவது நல்லது செய்வார்" என்றார் சிவாஜி.எம்.ஆர்.ராதாவும், ``நான் பையனை மெட்ராசுக்குக் கூட்டிக் கொண்டு போகிறேன். கட்டாயம் நல்ல எதிர்காலம் ஏற்படுத்திக் கொடுப்பேன்" என்று ராஜாமணி அம்மாளிடம் கூறினார்.ராதாவுடன் சென்னைக்குப் புறப்பட்டார், சிவாஜி. அவர் சென்னையைப் பார்ப்பது அதுதான் முதல் தடவை.

சென்னை ஜார்ஜ் டவுனில், தனக்குத் தெரிந்த ஒருவர் வீட்டில் சிவாஜியை தங்க வைத்தார், ராதா. நாடகக் கம்பெனிக்கான உடைகள், சீன்கள் போன்றவற்றை சேகரித்தார்.சிவாஜியை ஒரு நாள் ரிக்ஷாவில் ஏற்றி, ஊரைச் சுற்றிப்பார்த் துவிட்டு வருமாறு அனுப்பினார். சிவாஜி அதிசயத்தோடு சென்னையைச் சுற்றிப்பார்த்தார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சிவாஜியின் வாழ்க்கைக் குறிப்பு

Post by நண்பன் on Wed 15 Dec 2010 - 14:34

பெரியாருடன் அறிமுகம்

``சரஸ்வதி கான சபா" என்ற பெயரில் நாடகக் கம்பெனியைத் தொடங்க ராதா முடிவு செய்தார். நாடக சாமான்களுடன் ஈரோடு சென்றார். அங்கு ``லட்சுமி காந்தன்", ``விமலா அல்லது விதவையின் கண்ணீர்" ஆகிய நாடகங்களை நடத்தலானார்.திராவிட கழகத்தலைவர் ஈ.வெ.ரா. பெரியாரின் வீட்டுக்குப் பக்கத்தில்தான் ராதாவின் நாடகக் கம்பெனி இருந்தது. பெரியார் வீட்டுக்கு பேரறிஞர் அண்ணா, ஈ.வெ.கி.சம்பத் ஆகியோர் அடிக்கடி வருவார்கள். அவர்களுடன் சிவாஜிக்கு அறிமுகம் ஏற்பட்டது. பெரியார் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டார்.

ராதாவின் நாடகக் கம்பெனி ஈரோட்டில் இருந்து பொள்ளாச்சிக்கு சென்றது. அப்போது, ராதாவுக்கும், அவருடைய பங்குதாரர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. நாடக சாமான்களுக்கு அவர்கள்தான் முதலீடு செய்திருந்தார்கள். எனவே, நாடகக் கம்பெனியை பங்குதாரர்களிடம் ஒப்படைத்துவிட்டு ராதா சென்னைக்கு சென்றுவிட்டார். நாடகக் கம்பெனியில் தொடர்ந்து நடிக்க வேண்டிய கட்டாயத்தில் சிவாஜி இருந்தார்.நாடகக் கம்பெனி, கேரளாவுக்குச் சென்று

பாலக்காட்டில் முகாமிட்டது. சிறு வேடங்களில் நடித்து வந்த சிவாஜி, ``மனோகரா" நாடகத்தில் கதாநாயகனாக -மனோகரனாக நடித்தார். இந்த நாடகத்தை கொல்லங்கோடு மகாராஜா ஒரு நாள் பார்த்தார். சிவாஜியின் நடிப்பைப் பாராட்டி, வெள்ளித்தட்டு ஒன்றை பரிசளித்தார்.

பஸ் கம்பெனியில் ``மெக்கானிக்" வேலை பார்த்தார், சிவாஜி! சிவாஜிகணேசன் சிலகாலம் பஸ் கம்பெனியில் ``மெக்கானிக்" ஆக வேலைபார்த்தார் என்றால் நம்ப முடியவில்லை அல்லவா? ஆனால், அது உண்மை. மாதம் 7 ரூபாய் சம்பளத்தில், அவர் ``மெக்கானிக்" வேலை பார்த்திருக்கிறார்.

சிவாஜிகணேசன் நடித்துக்கொண்டிருந்த ``சரஸ்வதிகான சபா" கொல்லங்கோட்டில் முகாமிட்டிருந்தபோது, குறுகிய காலம் அவர் நாடக உலகைவிட்டு விலகி இருக்க நேர்ந்தது.

நாடகக் கம்பெனியில் நடித்துக்கொண்டிருந்த தங்கவேலு என்ற நடிகர் சிவாஜியின் நெருங்கிய நண்பர். இவரும் திருச்சியை சேர்ந்தவர். அவரைப் பார்க்க அவர் தாயார் வந்திருந்தார். நாடகக் கம்பெனியில் மகன் கஷ்டப்படுவதைப் பார்க்க சகிக்காத அந்த அம்மாள், மகனை வீட்டுக்குக் அழைத்துக்கொண்டு போய்விடத் தீர்மானித்தார்.

``கணேசா! நீயும் என்னுடன் வந்துவிடு" என்று தங்கவேலு அழைத்தார். சிவாஜிக்கும் ஒரு மாறுதல் தேவைப்பட்டது. எனவே, நண்பனுடன் கிளம்பத் தயாரானார். தங்கவேலுவின் உறவினர்கள் பொள்ளாச்சியில் இருந்தார்கள். அங்கு சென்று, அவர்களிடம் உதவி பெற்றுக்கொண்டு, திருச்சிக்குப் போக முடிவு செய்தார்கள்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சிவாஜியின் வாழ்க்கைக் குறிப்பு

Post by நண்பன் on Wed 15 Dec 2010 - 14:35

காட்டுப்பாதை

கொல்லங்கோட்டில் இருந்து பொள்ளாச்சிக்கு நடந்தே சென்றார்கள். காட்டுப்பாதையில் 40 மைல் நடக்க வேண்டும். வழியில் பலத்த மழை பிடித்துக்கொண்டது. மழையில் நனைந்து கொண்டே சென்றார்கள். வழியில், ``ஐயோ" என்று தங்கவேலு அலறினார். சிவாஜி திரும்பிப்பார்த்தார். தங்கவேலுவின் கால் அருகே ஒரு பாம்பு நெளிந்து போய்க்கொண்டு இருந்தது. தங்கவேலுவை பாம்பு கடித்துவிட்டது என்பதை சிவாஜி உணர்ந்து கொண்டார். அலறிக்கொண்டிருந்த தங்கவேலுவை தூக்கி தோளில் போட்டுக் கொண்டார். தங்கவேலுவின் தாயாரையும் அழைத்துக்கொண்டு, ஓட்டமும் நடையுமாக அருகில் உள்ள ஒரு கிராமத்தை அடைந்தார். அங்குள்ளவர்கள், வைத்தியரை அழைத்து, தங்கவேலுவுக்கு தகுந்த சிகிச்சை அளித்தார்கள். தங்கவேலு பிழைத்துக்கொண்டார். பிறகு கிராமவாசிகளின் உதவியுடன் சிவாஜியும், தங்கவேலுவும், அவர் தாயாரும் பொள்ளாச்சி சென்று, அங்கிருந்து திருச்சிக்கு போய்ச்சேர்ந்தார்கள்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சிவாஜியின் வாழ்க்கைக் குறிப்பு

Post by நண்பன் on Wed 15 Dec 2010 - 14:35

மெக்கானிக்

வீட்டில் ஒரு மாதகாலம் சும்மா இருந்தார், சிவாஜிகணேசன். குடும்பத்தை நடத்துவதற்கு பெற்றோர் படும் கஷ்டத்தை நேரில் பார்த்தார். ஏதாவது வேலைக்குப் போனால், அம்மாவுக்கு உதவியாக இருக்குமே என்று நினைத்தார்.அப்போது, ``திருச்சி ஸ்ரீரங்கம் டிரான்ஸ்போர்ட்" (டி.எஸ்.டி.) என்ற பஸ் கம்பெனி இருந்தது. நண்பர் ஒருவரின் முயற்சியால், அந்த பஸ் கம்பெனியில் சிவாஜிக்கு மெக்கானிக் வேலை கிடைத்தது.

ஏற்கனவே, சிவாஜிக்கு மெக்கானிக் வேலை கொஞ்சம் தெரியும். ஒரு மாதம் பயிற்சி பெற்று, வேலையை நன்றாக கற்றுக்கொண்டார். அவருக்கு அப்போது சம்பளம் 7 ரூபாய்! அதை அம்மாவிடம் கொடுத்து விடுவார். மெக்கானிக் வேலை பார்த்துக் கொண்டிருந்தாலும், மனம் நாடகத்தைச் சுற்றியே வட்டமிட்டுக் கொண்டிருந்தது.

``நாம் ஒரு நடிகன். இப்படி இரும்பைத் தூக்கிக்கொண்டு அலைகிறோமே. ஏதாவது விடிவுகாலம் வருமா? அல்லது காலம் எல்லாம் இப்படியே போய்விடுமா?" என்று நினைப்பார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சிவாஜியின் வாழ்க்கைக் குறிப்பு

Post by நண்பன் on Wed 15 Dec 2010 - 14:35

மீண்டும் நாடகம்


அப்போது யதார்த்தம் பொன்னுசாமிபிள்ளையின் ``பாலகான சபா", ``மங்கள கான சபா" என்ற புதிய பெயரில் நாடகங்கள் நடத்தி வந்தது. அக்காலத்தில் புகழ் பெற்று விளங்கிய டி.கே.சம்பங்கி, எம்.இ.மாதவன் ஆகிய நடிகர்கள் இந்த நாடகக் கம்பெனியை வாங்கி, கும்பகோணத்தில் முகாமிட்டு நாடகம் நடத்திக்கொண்டு இருந்தனர்.சிவாஜியின் பழைய நண்பர் ஒருவர், அந்த நாடகக் குழுவில் இருந்தார். திருச்சிக்கு வந்த அவர் சிவாஜியை சந்தித்தார். ``நீ மெக்கானிக் வேலையா பார்க்கிறாய்? நாடக நடிகனான நீ, இப்படி இரும்பைத் தூக்கிக்கொண்டு அலைகிறாயே. என்னுடன் வந்து விடு. மீண்டும் நாடகத்தில் நடிக்கலாம். நல்ல நடிகர்கள் இருந்தால் அழைத்து வருமாறு, கம்பெனி முதலாளி என்னிடம் சொன்னார்" என்றார். இதுபற்றி தாயாரிடம் சிவாஜி ஆலோசித்தார். மகனை மீண்டும் நாடகத்துக்கு அனுப்ப ராஜாமணி அம்மாளுக்கு விருப்பம் இல்லை. ``இப்போது பார்க்கும் மெக்கானிக் வேலையிலேயே தொடர்ந்து இரு. எதிர்காலத்தில் பெரிய மெக்கானிக் ஆகலாம்.

நாடகக் கம்பெனி வேண்டாம்" என்று கூறினார்.சிவாஜி யோசித்தார். நடிப்பு என்பது அவருடைய ரத்தத்தில் கலந்து விட்ட ஒன்று. மீண்டும் நாடகக் கம்பெனிக்கு போகக் தீர்மானித்தார். ``அம்மா! நாடகத்தில் தொடர்ந்து நடித்தால், எதிர் காலத்தில் நல்ல பெயர் கிடைக்கும். கொஞ்சகாலம் பொறுத்துக்கொள்" என்று ஆறுதல் கூறிவிட்டு, நண்பனுடன் கும்பகோணம் புறப்பட்டார்.அங்கு, சிவாஜியின் பழைய நண்பர்கள்தான் நாடகத்தில் நடித்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் மகிழ்ச்சியுடன் சிவாஜியை வரவேற்றார்கள்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சிவாஜியின் வாழ்க்கைக் குறிப்பு

Post by நண்பன் on Wed 15 Dec 2010 - 14:35

என்.எஸ்.கிருஷ்ணன்

மங்கள கான சபா, சென்னைக்கு சென்று நாடகங்கள் நடத்தி வந்தது. அப்போது, அந்த கம்பெனியை கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் வாங்கி, ``என்.எஸ்.கே.நாடக சபா" என்ற புதிய பெயரில் நாடகங்களை நடத்தலானார்.அப்போது அந்த கம்பெனியில் கே.ஆர்.ராமசாமி, டி.வி.நாராயணசாமி ஆகியோர் சேர்ந்தார்கள். கே.ஆர்.ராமசாமி நன்றாக பாடக்கூடியவர். எனவே, ``மனோகரா", ``ரத்னாவளி" போன்ற நாடகங்களில் அவர் கதாநாயகனாக நடித்தார். சிவாஜி மீண்டும் பெண் வேடம் போட்டார்!

இந்த சமயத்தில் (1944-ம் ஆண்டு நவம்பரில்) ``இந்துநேசன்" என்ற மஞ்சள் பத்திரிகையின் ஆசிரியரான லட்சுமிகாந்தன் கொலை செய்யப்பட்டார். கொலைக்கு சதி செய்தாக கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும், எம்.கே.தியாகராஜ பாகவதரும் கைது செய்யப்பட்டனர்.இந்த வழக்கில் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இருவரும் லண்டனில் உள்ள பிரிவி கவுன்சிலில் அப்பீல் செய்து, விடுதலை பெறுவதற்காக சட்டத்தின் துணையுடன் போராடிக் கொண்டிருந்தார்கள். என்.எஸ்.கிருஷ்ணன் சிறையில் இருந்தாலும், தன்னுடைய நாடகக் குழுவினர் வேலை இல்லாமல் கஷ்டப்படக்கூடாது என்று எண்ணினார். எனவே, நாடகக் கம்பெனியைத் தொடர்ந்து நடத்தும்படி, தன் மனைவி டி.ஏ.மதுரத்திடம் கூறினார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சிவாஜியின் வாழ்க்கைக் குறிப்பு

Post by நண்பன் on Wed 15 Dec 2010 - 14:36

நாடகக் கம்பெனியில் பிளவு

எஸ்.கே.நாடகக் குழுவில், அப்போது எஸ்.வி.சகஸ்ரநாமமும், கே.ஆர்.ராமசாமியும் முக்கிய நடிகர்கள். இவர்களில் யாரிடம் நிர்வாகப் பொறுப்பை ஒப்படைப்பது என்று மதுரம் யோசித்தார். முடிவில் சகஸ்ரநாமத்திடம் ஒப்படைக்கத் தீர்மானித்தார். இதனால், கே.ஆர்.ராமசாமி வருத்தம் அடைந்தார். என்.எஸ்.கே.நாடக சபாவில் இருந்து விலகி, புது நாடகக் கம்பெனி தொடங்க தீர்மானித்தார். இதைத் தொடர்ந்து, நாடகக் குழு இரண்டாக பிளவுபட்டது. சிலர் சகஸ்ர நாமம் அணியிலும், சிலர் கே.ஆர்.ராமசாமி அணியிலும் சேர்ந்தனர். கே.ஆர்.ராமசாமியுடன் சேர்ந்தவர்களில் சிவாஜிகணேசனும் ஒருவர். பேரறிஞர் அண்ணாவுடன் நெருங்கிய தொடர்பு உடையவர் கே.ஆர்.ராமசாமி. அவர் அண்ணாவை சந்திப்பதற்காக காஞ்சீபுரம் சென்றார். போகும்போது, சிவாஜிகணேசனையும், தன் ஆதரவாளர்களையும் அழைத்துச்சென்றார். அண்ணா அப்போது ``திராவிட நாடு" என்றபத்திரிகையை நடத்தி வந்தார். அந்த பத்திரிகை அலுவலகத்தில், சிவாஜியும், மற்றவர்களும் தங்கினார்கள். சிவாஜிகணேசன் வாழ்க்கையில் திருப்புமுனை திராவிட கழகத்தில் இருந்து தி.மு.கழகம் பிரியாத காலக்கட்டம் அது (1946). சென்னையில் ஏழாவது சுய மரியாதை மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகளில், பெரியாரும், அண்ணாவும் தீவிரமாக ஈடுபட்டு இருந்தனர்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சிவாஜியின் வாழ்க்கைக் குறிப்பு

Post by நண்பன் on Wed 15 Dec 2010 - 14:36

அண்ணாவின் நாடகம்

மாநாட்டில் நடிப்பதற்காக ``சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்" என்ற பெயரில் ஒரு நாடகத்தை அண்ணா எழுதியிருந்தார்.இந்த நாடகத்தின் கதைச்சுருக்கம் வருமாறு:

சிவாஜி பெரிய மாவீரன். சாதாரணக் குடிமகனாக இருந்து பெரிய மன்னனானவன். அந்நியர் ஆட்சியை எதிர்த்தவன்.மராட்டிய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியபோதிலும், அவன் மன்னனாக முடி சூட்டிக் கொள்ள பெரிய எதிர்ப்பு கிளம்புகிறது. காரணம், அவன் கீழ் சாதி!

இதனால், காசியில் இருந்து காகப்பட்டர் என்ற பெரிய மதத் தலைவரை அழைத்து வந்து, சிவாஜியை சத்திரியனாக மாற்றுகிறார்கள். அதன்பிறகு தான் அவர் சிம்மாசனம் ஏற, இந்துக்கள் சம்மதிக்கிறார்கள். இப்படி செல்லும் இந்த நாடகத்தில், சிவாஜியாக எம்.ஜி.ஆரும், காகப்பட்டர் வேடத்தில் அண்ணாவும், மற்றொரு முக்கிய வேடத்தில் டி.வி.நாராயணசாமியும் நடிப்பது என்று முடிவாகியது. இந்தக் காலக்கட்டத்தில், எம்.ஜி.ஆர். திரைப் படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்தார். காங்கிரஸ் அனுதாபியாகவும், பக்தராகவும் இருந்தார்.என்ன காரணத்தினாலோ, எம்.ஜி.ஆர். அந்த நாடகத்தில் நடிக்கவில்லை. நாடகத்துக்குப் பொறுப்பாளராக இருந்த நடிகர் டி.வி.நாராயணசாமி அண்ணாவை சந்தித்து, எம்.ஜி.ஆர். தன்னால் நடிக்க இயலாது என்று கூறிவிட்டதாக தெரிவித்தார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சிவாஜியின் வாழ்க்கைக் குறிப்பு

Post by நண்பன் on Wed 15 Dec 2010 - 14:36

வாழ்க்கையில் திருப்புமுனை

``திராவிட நாடு" அலுவலகத்தில் தங்கியிருந்த சிவாஜி கணேசன், இதற்குள் அண்ணாவுடன் நெருங்கிப் பழகியிருந்தார். சிவாஜியின் நடிப்பாற்றல் பற்றி அண்ணாவும் நன்கு அறிந்திருந்தார்.எனவே, சிவாஜியை அழைத்து, ``கணேசா! என் நாடகத்தில் நீ சிவாஜி வேடத்தில் நடிக்கிறாயா?" என்று கேட்டார். இதைக்கேட்டு சிவாஜிக்கு இன்ப அதிர்ச்சி!

தன் காதுகளையே நம்பமுடியவில்லை. ``என்ன அண்ணா சொல்கிறீர்கள்? உங்கள் நாடகத்தில் நான் நடிப்பதா? அதுவும் சிவாஜி வேடத்தில்! என்னால் முடியுமா?" என்றார். ``நீ முயற்சி செய்து பார், கணேசா! உன்னால் முடியும்" என்றார், அண்ணா.மேலும் அவர் எழுதிய 90 பக்க நாடக வசனங்களை சிவாஜியிடம் கொடுத்து, ``நான் வீட்டிற்குச் சென்று வருகிறேன். அதற்குள் இதை நீ படித்து வைத்திரு. எப்படிப் பேசுகிறாய் என்று பார்ப்போம்" என்று
கூறிவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

அவர் சிவாஜியிடம் வசனத்தை கொடுத்தபோது பகல் பதினோரு மணி இருக்கும். அண்ணா வீட்டிற்கு சென்று, மாலை ஆறு மணியளவில் திரும்பி, அலுவலகத்திற்கு வந்தார். ``கணேசா! வசனத்தைப் படித்தாயா?" என்று கேட்டார்.சிவாஜி அவரிடம், ``அண்ணா! நீங்கள் இப்படி உட்காருங்கள்!" என்று கூறி, அவர் எழுதிக்கொடுத்த வசனங்களைப் பேசி, அதற்குத் தகுந்தாற்போல் நடித்துக் காண்பித்தார். அண்ணா சிவாஜியை கட்டித்தழுவி ``கணேசா! நீ இதை ஏழே மணி நேரத்தில் மனப்பாடம் செய்து விட்டாயே! அரிய சாதனை" என்றார்.

அண்ணா எழுதிய 90 பக்க வசனத்தை குறுகிய காலத்தில் படித்து, நடித்துக் காட்டினார் என்றால் அதற்கு சிவாஜியிடம் இருந்த கலை ஆர்வமும், மனப்பாடம் செய்வதில் அவருக்கு இருந்த ஆற்றலும்தான் காரணம்.

திராவிட கழக மாநாட்டில், ``சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்" நாடகம் நடந்தது. இந்த நாடகத்தில் சிவாஜியாக சிவாஜி கணேசனும், காகபட்டர் வேடத்தில் அண்ணாவும் நடித்தனர்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சிவாஜியின் வாழ்க்கைக் குறிப்பு

Post by நண்பன் on Wed 15 Dec 2010 - 14:36

பெரியார் பாராட்டு

3 மணி நேரம் நடந்த நாடகத்தை, கடைசி வரை இருந்து பார்த்தார், பெரியார். ``நான் 10 மாநாடுகளில் சொல்லக்கூடிய கருத்துக்களை இந்த ஒரே நாடகத்தில் சொல்லிவிட்டார், அண்ணா" என்று பாராட்டினார்.அத்துடன், ``யாரோ ஒரு சின்னப்பையன் சிவாஜியாக நடித்தானே, அவன் யார்?" என்று கேட்டார். சிவாஜிகணேசனை பெரியார் முன் கொண்டுபோய் நிறுத்தி, ``இந்தப் பையன்தான். பெயர் கணேசன்" என்று அறிமுகம் செய்து வைத்தனர். ``சிவாஜியாக ரொம்ப நன்றாக நடித்தாய்! இன்று முதல் நீ கணேசன் அல்ல; சிவாஜி!" என்று பெரியார் வாழ்த்தினார். பெரியாரின் இந்த வாழ்த்து பெரிய பட்டமாக அமைந்து விட்டது. அதுவரை ``வி.சி.கணேசன்" என்று அழைக்கப்பட்டவர், அன்று முதல் ``சிவாஜி கணேசன்" ஆனார்.

``என்னுடைய வாழ்க்கையின் உயர்வுக்கு உறுதுணையாக இருந்தது சிவாஜி என்ற பெயர்! ஐயாவையும், அண்ணாவையும், அந்த மாநாட்டையும் நான் என்றுமே மறப்பதில்லை. அதற்குப்பிறகுதான் சாதாரண கணேசன், சிவாஜிகணேசன் ஆனேன். `சிவாஜி' என்ற பெயர், தந்தை பெரியார் அவர்கள் எனக்குப் போட்டபிச்சை" என்று சிவாஜிகணேசன் தன் வாழ்க்கை வரலாற்றில் குறிப்பிட்டுள்ளார்.

``பராசக்தி" வருவதற்கு முன்பே சிவாஜி கணேசன் திருமணம் சீர்திருத்த முறையில் நடந்தது(1-5-1952)

நடிகர் சிவாஜி கணேசன் திருமணம், ``பராசக்தி" படம் வருவதற்கு சில மாதங்களுக்கு முன்பாக சுவாமி மலையில் நடந்தது. கே.ஆர்.ராமசாமி குழுவில் சிவாஜி நடிகர் கே.ஆர்.ராமசாமி தன் நாடகக் குழுவை தஞ்சாவூரில் தொடங்கினார். இந்த நாடக்குழுவில், சிவாஜி கணேசனும் இடம் பெற்றார். ``மனோகரா" நாடகத்தில் கே.ஆர்.ராமசாமி மனோகரனாக நடித்தார். சிவாஜிகணேசன், மனோகரனின் தாயார் பத்மாவதியாக நடித்தார். இந்த சமயத்தில்தான் கே.ஆர்.ராமசாமிக்காக ``ஓர் இரவு" என்ற நாடகத்தை அண்ணா எழுதினார். ஒரே இரவில் நடைபெறும் சம்பவங்களைக் கொண்டு, கதையை புதுமையாக எழுதியிருந்தார். இந்த நாடகத்தில் சிவாஜி கணேசனும் நடிப்பதாக இருந்தது. ஆனால், நாடகக் குழுவைச் சேர்ந்த ஒருவருடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமையால், அவர் நாடகத்தில் நடிக்கவில்லை காஞ்சீபுரத்துக்கு சென்று, ``திராவிட நாடு" அலுவலகத்தில் தங்கிக் கொண்டு, அண்ணாவுக்கு உதவியாக இருந்தார். அண்ணா பொதுக்கூட்டங்களுக்குச் செல்லும்போது, சிவாஜியையும் தன்னுடன் அழைத்துச் செல்வார். மேடையில் பேசுவதற்கு பயிற்சி அளிப்பார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சிவாஜியின் வாழ்க்கைக் குறிப்பு

Post by நண்பன் on Wed 15 Dec 2010 - 14:37

சக்தி நாடகசபா

இந்தக்காலக் கட்டத்தில், ``சக்தி நாடக சபா" என்ற நாடகக் குழுவினர் நாடகங்களை நடத்தி வந்தனர். தங்கவேலுபிள்ளை என்பவர் இந்த நாடகக் கம்பெனியின் உரிமையாளர். எனினும், ``சக்தி" கிருஷ்ணசாமியின் முழுப்பொறுப்பில் நாடக கம்பெனி நடந்து வந்தது.

இந்த கம்பெனியில் முக்கிய நடிகர்களாக இருந்த எம்.என். நம்பியார், எஸ்.வி.சுப்பையா ஆகியோர் ஜுபிடர் பிக்சர்ஸ் தயாரித்த சினிமா படங்களில் நடிப்பதற்காக கோவை சென்று விட்டனர். எனவே, சக்தி நாடக சபைக்கு அனுபவம் மிக்க நடிகர்கள் தேவைப்பட்டனர்.

சிவாஜியின் பால்ய நண்பரான கரந்தை சண்முக வடிவேலு சக்தி நாடகசபை சார்பில் காஞ்சீபுரம் வந்து, அண்ணாவை சந்தித்தார். ``சக்தி நாடக சபாவுக்கு நல்ல நடிகர்கள் தேவைப் படுகிறார்கள். நீங்கள் சிவாஜிகணேசனை அனுப்பி வைத்தால் உதவியாக இருக்கும்" என்று கூறினார்.

அண்ணா சிறிது யோசித்தார். பிறகு சிவாஜி கணேசனை அழைத்து, ``கணேசா!நீ சக்தி நாடக சபாவுக்குப் போ. உன்னை எப்போது திரும்பக் கூப்பிட வேண்டுமோ அப்போது அழைத்துக் கொள்கிறேன்" என்றார். இதனால், அண்ணாவிடம் பிரியா விடை பெற்று சக்தி நாடக சபாவுக்கு சிவாஜி சென்றார். சக்தி நாடக சபை அப்போது திண்டுக்கல்லில் நாடகங்கள் நடத்திக் கொண்டிருந்தது. அந்தக் குழுவினர் சிவாஜிக்கு நல்ல மரியாதை கொடுத்தனர். முக்கிய வேடங்கள் அவருக்குக் கிடைத்தன.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சிவாஜியின் வாழ்க்கைக் குறிப்பு

Post by நண்பன் on Wed 15 Dec 2010 - 14:37

வேலூர் முகாம்

திண்டுக்கல்லில் இருந்து பெங்களூர் சென்றுவிட்டு, வேலூர் சக்தி நாடகசபா முகாமிட்டது.

அப்போது ``நூர்ஜஹான்" என்ற நாடகத்தில், நூர்ஜஹானாக சிவாஜி நடித்தார். அந்த நாடகத்தில் சிவாஜிக்கு வேஷப்பொருத்தம் பிரமாதமாக இருக்கும். அசல் நூர்ஜஹான் போலவே இருப்பார்; அழகாக நடனம் ஆடுவார்.

``நேஷனல் பிக்சர்ஸ்" பி.ஏ.பெருமாள், இந்த நாடகத்தைப் பார்த்தார். சிவாஜியின் நடிப்பு அவரை வெகுவாகக் கவர்ந்தது. ``எதிர்காலத்தில் மிகப்பெரிய நடிகராக சிவாஜி வருவார்" என்று நினைத்தார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சிவாஜியின் வாழ்க்கைக் குறிப்பு

Post by நண்பன் on Wed 15 Dec 2010 - 14:37

பராசக்தி

இந்த சமயத்தில், தேவி நாடக சபையினர் ``பராசக்தி" என்ற நாடகத்தை நடத்தி வந்தனர். அந்த நாடகத்தை பெருமாள் முதலியார் பார்த்தார். அந்த நாடகத்தின் கதை அவருக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது.``பராசக்தி கதையை படமாகத் தயாரிக்க வேண்டும். அதில் சிவாஜி கணேசனை கதாநாயகனாக நடிக்க வைக்க வேண்டும்" என்று தீர்மானித்தார். நினைத்ததை செயலில் காட்டினார். ``ஏவி.எம்." கூட்டுறவுடன் ``பராசக்தி"யை எடுத்து, தமிழ்ப்பட உலகுக்கு நடிப்பின் இமயத்தை அறிமுகம் செய்து வைத்தார். தனக்கு வாழ்வளித்த பெருமாள் முதலியாரை, கடைசி மூச்சு உள்ள வரை தெய்வமாகவே கருதினார், சிவாஜிகணேசன்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சிவாஜியின் வாழ்க்கைக் குறிப்பு

Post by நண்பன் on Wed 15 Dec 2010 - 14:37

திருமணம்

``பராசக்தி"யில் நடித்துக் கொண்டிருந்தபோதே, சிவாஜி கணேசனுக்குத் திருமணம்நடந்து விட்டது. சொந்த அக்காள் மகள் கமலாவை அவர் மணந்தார்.பெரியவர்களால் முடிவு செய்யப்பட்ட இத்திருமணம், சுவாமிமலையில் 1952 மே 1-ந் தேதி நடைபெற்றது.

சீர்திருத்த முறைப்படி எளிமையாக இத்திருமணம் நடந்தது. திருமணத்துக்கு மு.கருணாநிதி, எம்.ஜி. ஆர்., நேஷனல் பிக்சர்ஸ் அதிபர் பெருமாள் முதலியார், கவிஞர் கண்ணதாசன், அரங்கண்ணல், டி.ஏ. மதுரம், எஸ்.வி. சகஸ்ரநாமம், டைரக்டர்கள் கிருஷ்ணன்-


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சிவாஜியின் வாழ்க்கைக் குறிப்பு

Post by நண்பன் on Wed 15 Dec 2010 - 14:38

பஞ்சு ஆகியோர் வந்திருந்தனர்.

திருச்சியில் தமிழாசிரியராக இருந்த ரத்தினம் பிள்ளை, திருக்குறளைப்படித்து திருமணத்தை நடத்தி வைத்தார். கண்ணதாசன் மாலையை எடுத்துக் கொடுக்க அதை மணமகளுக்கு அணிவித்தார், சிவாஜி. பின்னர் தாலி கட்டினார். மணமக்களை கண்ணதாசன் வாழ்த்தி

பேசினார். ஓட்டலில் இருந்து எடுத்து வந்த சாப்பாடு அனைவருக்கும் பரிமாறப்பட்டது.

``என்னுடைய கல்யாணச் செலவு 500 ரூபாய்தான்" என்று சிவாஜி கூறியுள்ளார்.

(இப்படி தான் திருமணம் செய்து கொண்டதால் வருத்தப்பட்ட சிவாஜி தனது தம்பி சண்முகத்தின் திருமணத்திற்கு 100 புரோகிதர்களை வைத்து ஆச்சாரப்படி நடத்தினார்)


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சிவாஜியின் வாழ்க்கைக் குறிப்பு

Post by நண்பன் on Wed 15 Dec 2010 - 14:38

கோடம்பாக்கத்தில்

திருமணத்துக்குப் பிறகு சென்னை கோடம்பாக்கத்தில் வீடு பார்த்து, மனைவியுடன் குடியேறினார், சிவாஜிகணேசன். சில நாட்கள் கழித்து ராயப்பேட்டை பெசன்ட்

ரோட்டுக்கு குடிபோனார். அங்குதான் இப்போது சிவாஜி பிலிம்ஸ் அலுவலகம் இருக்கிறது.

சிவாஜி- பத்மினி ஜோடியாக நடித்த முதல் படம் ``பணம்" ``பராசக்தி"யை அடுத்து சிவாஜி கணேசன் நடித்து வெளிவந்த படம் ``பணம்". இதில் சிவாஜி கணேசனும், பத்மினியும் முதன் முதலாக ஜோடி சேர்ந்தனர். ``பராசக்தி"யில் சிவாஜிகணேசன் நடித்துக் கொண்டிருந்த போதே வேறு சில படவாய்ப்புகள் வந்தன.நன்றி மாலை மலர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சிவாஜியின் வாழ்க்கைக் குறிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum